குஜராத் கோர்ட்டு ராகுல் காந்திக்கு சம்மன்: ஜூன் 7-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு


குஜராத் கோர்ட்டு ராகுல் காந்திக்கு சம்மன்: ஜூன் 7-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2019 2:58 AM IST (Updated: 4 May 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருடர்களுக்கு மோடி என்ற பொது பெயர் கூறிய ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக ஜூன் 7-ந் தேதி அவரை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

சூரத்,

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி... எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பொதுப் பெயரை வைத்திருக்கிறார்கள்” என்று பேசினார். இதுகுறித்து குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் சூரத் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஏப்ரல் 16-ந் தேதி ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தை அவமதித்துவிட்டார் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கபாடியா, ஜூன் 7-ந் தேதி ராகுல் காந்தி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Next Story