தமிழக மாணவர்களுக்கு எதிரான கெஜ்ரிவாலின் பிரசாரத்துக்கு தடை கோரி தேர்தல் கமிஷனிடம் மனு


தமிழக மாணவர்களுக்கு எதிரான கெஜ்ரிவாலின் பிரசாரத்துக்கு தடை கோரி தேர்தல் கமிஷனிடம் மனு
x
தினத்தந்தி 5 May 2019 12:41 AM IST (Updated: 5 May 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மாணவர்களுக்கு எதிரான கெஜ்ரிவாலின் பிரசாரத்துக்கு தடை கோரி தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், செல்போனில் தனது பதிவுக்குரல் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பதிவுக்குரலில், “டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 500 இடங்களை தமிழக மாணவர்கள் பெற்று விடுகிறார்கள். இதனால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு தவறுகிறது. ஆம் ஆத்மியை ஆதரித்தால் டெல்லி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்வேன்” என்று கூறி உள்ளார்.

கெஜ்ரிவாலின் இந்த பிரசாரத்துக்கு டெல்லியில் படிக்கும் தமிழக மாணவ-மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அகில இந்திய அளவில் தகுதி அடிப்படையிலேயே தமிழக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்த அவர்கள், கெஜ்ரிவாலின் இந்த பதிவுக்குரல் பிரசாரத்தை உடனே தடை செய்யுமாறு கோரி தலைமை தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தனர்.


Next Story