ராகுல் காந்தி விரும்பினால் ஒரு செய்தி தொடர்பாளரை விவாதத்துக்கு அனுப்பி வைக்கிறோம் - பா.ஜனதா கிண்டல்
ராகுல் காந்தி விரும்பினால் ஒரு செய்தி தொடர்பாளரை விவாதத்துக்கு அனுப்பி வைக்கிறோம் என பா.ஜனதா கிண்டலாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதத்துக்கு தயாரா? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார். தற்போதும் கூட, நாட்டின் வேலையில்லா திண்டாட்டம், ஊழல் குறித்து என்னுடன் 10 நிமிடம் விவாதத்துக்கு தயாரா? என அவர் சவால் விடுத்து இருந்தார்.
இதற்கு பா.ஜனதா நேற்று கிண்டலாக பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறுகையில், ‘பிரதமர் மோடியுடன் விவாதம் செய்யும் அளவுக்கு ராகுல் காந்தி இன்னும் வளரவில்லை. அப்படியும் அவர் விவாதம் செய்ய விரும்பினால், எங்களின் ஏதாவது ஒரு செய்தி தொடர்பாளரை அனுப்பி வைக்கிறோம், அவருடன் விவாதம் செய்யட்டும். யார் புறமுதுகிட்டு ஓடுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story