தேசிய செய்திகள்

கேரளாவில் மனைவி உள்பட 3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் தற்கொலை + "||" + Youth commits suicide after setting on fire his 3 family members

கேரளாவில் மனைவி உள்பட 3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் தற்கொலை

கேரளாவில் மனைவி உள்பட 3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் தற்கொலை
கேரளாவில் மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கொச்சி,

கேரளாவில் கலமசேரி பகுதியில் வசித்து வந்தவர் சாஜி (வயது 31).  இவரது மனைவி பிந்து (வயது 29).  இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஸ்ரீஹரி என்ற ஆண் குழந்தை உள்ளது.  சாஜி ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சாஜி, தனது மனைவி மற்றும் குழந்தை மீது தீ வைத்து கொளுத்தியுள்ளார்.  அவர்களின் சத்தம் கேட்டு சாஜியின் மாமியார் ஆனந்தவல்லி அங்கு வந்துள்ளார்.  அவர் மீதும் தீ வைத்து விட்டு குளியலறைக்கு சென்று சாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  குடும்ப விவகாரத்தில் இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வல்லத்தில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர்-மனைவி படுகாயம்
வல்லத்தில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரும், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
2. மனைவி, கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்தனர்.
3. மனைவியை எரித்துக் கொன்ற கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை எரித்துக் கொன்ற கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
4. மனைவியை கவர அதிரடியாக ஆடுகிறேன் - ரஸ்செல் ருசிகரம்
மனைவியை கவருவதற்காக, தான் அதிரடியாக ஆடுவதாக ரஸ்செல் தெரிவித்தார்.
5. கும்பகோணத்தில் பரிதாபம்: கணவன்-மனைவி தற்கொலை
கும்பகோணத்தில், குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.