கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி


கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 7 May 2019 11:23 AM IST (Updated: 7 May 2019 11:23 AM IST)
t-max-icont-min-icon

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம்,  மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் இதற்காக அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார். 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டதோடு, வைப்புத்தொகையாக ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Next Story