தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: மத்திய மந்திரி கோர்ட்டில் சரண்


தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: மத்திய மந்திரி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 7 May 2019 11:42 PM IST (Updated: 7 May 2019 11:42 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு தொடர்பாக, மத்திய மந்திரி கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பெகுசாரை,

மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான கிரிராஜ் சிங், பீகார் மாநிலம் பெகுசாரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. கடந்த 24-ந் தேதி, தேர்தல் பிரசாரத்தின்போது, “வந்தே மாதரம் என்று சொல்ல முடியாதவர்களையும், தாய்நாட்டை மதிக்காதவர்களையும் நாடு மன்னிக்காது” என்று கிரிராஜ் சிங் பேசினார்.

இதன்மூலம், அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெகுசாரையில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், பெகுசாரை கோர்ட்டில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இன்று சரண் அடைந்தார். அவரை மாஜிஸ்திரேட் தாக்குர் அமன் குமார் உடனடியாக ஜாமீனில் விடுவித்தார். தலா ரூ.5 ஆயிரத்துக்கான ஜாமீன் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

Next Story