மராட்டியத்தில் குடிநீரின்றி மக்கள், விலங்குகள் தவிப்பு


மராட்டியத்தில் குடிநீரின்றி மக்கள், விலங்குகள் தவிப்பு
x
தினத்தந்தி 8 May 2019 4:07 PM IST (Updated: 8 May 2019 4:07 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் குடிநீரின்றி மக்கள், விலங்குகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் வறட்சியின் கோரமுகம் தெரிய தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். மராட்டிய மாநிலமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் மாவட்டம் நவ்கோன் கிராமத்தில் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்கிறார்கள். கோதாவரி ஆறு வறண்டு விட்டது. 

எங்களுக்கும், எங்களுடைய ஆடு, மாடுகளுக்கும் குடிக்க தண்ணீர் கிடையாது. மாநில அரசிடம் இருந்து எங்களுக்கு எந்தஒரு உதவியும் செய்யப்படவில்லை என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Next Story