புனே அருகே துணிக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி


புனே அருகே துணிக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 9 May 2019 8:32 AM IST (Updated: 9 May 2019 8:32 AM IST)
t-max-icont-min-icon

புனேவில் ஆடைகள் வைக்கப்பட்டு இருந்த குடோவுனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.

புனே, 

மராட்டிய மாநிலம் புனே  அருகே உள்ள கிராமத்தில், ஆடைகள் வைக்கப்பட்டு இருந்த குடோவுனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும்,  4 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story