சீக்கியர் படுகொலை விவகாரம் : பா.ஜனதா உண்மையை திரிக்கிறது -சாம் பிட்ரோடா கண்டனம்


சீக்கியர் படுகொலை விவகாரம் : பா.ஜனதா உண்மையை திரிக்கிறது -சாம் பிட்ரோடா கண்டனம்
x
தினத்தந்தி 10 May 2019 7:50 PM IST (Updated: 10 May 2019 7:50 PM IST)
t-max-icont-min-icon

சீக்கியர் படுகொலை விவகாரத்தில் என்னுடைய கருத்தை பா.ஜனதா திரிக்கிறது என காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி 1984 சீக்கிய கலவரத்தை மையப்படுத்தி தீவிரமாக பிரசாரம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் அமைதி காத்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, சீக்கியர் படுகொலை பற்றிய கேள்விக்கு ‘‘அது 1984–ல் நடந்தது. அதற்கு என்ன?’’ என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனை பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சாம் பிட்ரோடாவின் கருத்தில் இருந்து காங்கிரஸ் தன்னை விலக்கிக்கொண்டது.

சாம் பிட்ரோடா பேசுகையில், எனது பேட்டியில் 3 வார்த்தைகளை வைத்து பா.ஜனதா, உண்மையை திரித்து கூறுகிறது. வாய்மையே வெல்லும், பொய் அம்பலமாகும். மக்களை பிளவுபடுத்தி, தங்கள் தோல்வியை மறைப்பதே அவர்களின் நோக்கம். அவர்களிடம் சொல்வதற்கு நேர்மறையான வி‌ஷயங்களே இல்லை. இவையெல்லாம் கடந்த காலத்தில் நடந்தவை. இந்த தேர்தலுக்கு பொருத்தமற்றவை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

1984–ம் ஆண்டு, கடினமான நேரத்தில் சீக்கிய சகோதர, சகோதரிகள் அடைந்த வேதனையை நான் உணர்ந்துள்ளேன். அப்போது நடந்த அராஜகங்களால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன் எனக் கூறியுள்ளார். பா.ஜனதா அரசு செய்தது என்ன என்பது தொடர்பான பிற பிரச்சினைகளை பற்றியே ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். என் கருத்து தவறுதலாக பரப்பப்படுகிறது, நான் மன்னிப்பு கேட்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story