மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது வெடிபொருட்கள் வெடித்து 3 பேர் சாவு


மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது வெடிபொருட்கள் வெடித்து 3 பேர் சாவு
x
தினத்தந்தி 13 May 2019 3:00 AM IST (Updated: 13 May 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வெடிபொருட்கள் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் கிர்தி மாவட்டம் படமந்த் பாமசியா பகுதியில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்களுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறின.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த நபர் மற்றும் அந்த பகுதியில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிணறு தோண்டுவதற்காக அந்த நபர் வெடிபொருட்களை வாங்கிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story