ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: வாலிபர் கைது; ரூ.70.33 லட்சம் பணம் பறிமுதல்


ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்:   வாலிபர் கைது; ரூ.70.33 லட்சம் பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 13 May 2019 11:28 AM GMT (Updated: 13 May 2019 11:28 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆன்லைன் வழியே சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்தது.  இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்சை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் வசித்து வரும் சந்த் பாஷா (வயது 25) என்பவர் தனது வீட்டில் இருந்து ஆன்லைன் வழியே இந்த போட்டிக்கான சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.  இதுபற்றிய தகவல் அறிந்து மத்திய குற்ற பிரிவு சிறப்பு படையினர் அங்கு சென்றனர்.  அவர்களை கண்டதும் சையது இலியாஸ் என்பவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  பாஷாவை அவர்கள் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.70.33 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.  இதுபற்றி போலீசார் வழக்கு ஒன்று பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story