பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் டாங்கிகளை குவித்த பாகிஸ்தான் ராணுவம்


பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் டாங்கிகளை குவித்த பாகிஸ்தான் ராணுவம்
x
தினத்தந்தி 14 May 2019 9:36 AM GMT (Updated: 14 May 2019 9:36 AM GMT)

பாலகோட் விமானப்படை தாக்குதலை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் டாங்கிகளை குவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி இறுதியில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெரும் இழப்பு நேரிட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என கூறிவருகிறது. இதற்கிடையே இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் டாங்கிகளை குவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் எல்லையில் அந்நாட்டு ராணுவம் 300 டாங்கிகளை குவித்து வைத்துள்ளது. ராணுவ தளவாடங்களையும், ராணுவ வீரர்களையும் நிலை நிறுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story