பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் களமிறங்கிய தாதா திடீர் விலகல்


பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் களமிறங்கிய தாதா திடீர் விலகல்
x
தினத்தந்தி 15 May 2019 3:15 AM IST (Updated: 15 May 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் களமிறங்கிய தாதா திடீரென விலகினார்.

வாரணாசி,

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து ஆதிக் அகமது என்ற பிரபல தாதாவும் களமிறங்கினார். தற்போது பிரயாக்ராஜ் நகரில் உள்ள நைனி சிறையில் இருக்கும் அவர் வாரணாசி தொகுதியில் வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தார். சுயேச்சையாக நின்ற அவருக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.

இந்தநிலையில் தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக ஆதிக் அகமது திடீரென அறிவித்தார். இது தொடர்பாக சிறையில் இருந்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு பிரசாரம் செய்ய பரோல் வழங்காததால் போட்டியில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.

Next Story