வீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு கன்னத்தில் 168 அறை-ஆசிரியர் கைது
மத்தியபிரதேசத்தில், மாணவியை 168 முறை கன்னத்தில் அறைய செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போபால்
ஜாபுவா மாவட்டத்தில் உள்ள தண்டலா பகுதியில் ஜவஹர் நவோதயா என்ற அரசு பள்ளி இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு இப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்த மாணவி, உடல்நலம் குறைவு காரணமாக 10 நாட்கள் விடுப்புக்கு பின் ஜனவரி 11ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளாள். வீட்டுப் பாடம் எழுதாமல் சென்றிருந்ததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் மனோஜ் வர்மா, மாணவியை 6 நாட்களுக்கு சக மாணவிகள் 14 பேர் இருமுறை கன்னத்தில் அறைய உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மாணவிகள் 168 முறை கன்னத்தில் அறையவே மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்த நிலையில், போலீசாரும் மனோஜை கைது செய்து 14 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் மனோஜின் ஜாமீன் மனுவையும் மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Related Tags :
Next Story