ஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் - தேவஸ்தானம் தகவல்


ஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் - தேவஸ்தானம் தகவல்
x
தினத்தந்தி 17 May 2019 1:36 AM IST (Updated: 17 May 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடி திருப்பதிக்குக் கொண்டு சென்று சுத்தம் செய்து நேற்று இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது.

நேற்று மொத்தம் 600 கிலோ தலைமுடி ஏலம் போனதில் தேவஸ்தானத்துக்குக் கிடைத்த வருமானம் ரூ.1¼ கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story