மகாத்மா காந்தியை ‘பாகிஸ்தானின் தந்தை’ என பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகி நீக்கம்


மகாத்மா காந்தியை ‘பாகிஸ்தானின் தந்தை’ என பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகி நீக்கம்
x
தினத்தந்தி 18 May 2019 3:00 AM IST (Updated: 18 May 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியை ‘பாகிஸ்தானின் தந்தை’ என பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகி நீக்கப்பட்டார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்தவர் அனில் சவுமித்ரா. இவர் சமூக வலைத்தளத்தில், மகாத்மா காந்தி, இந்தியாவின் தந்தை கிடையாது. அவர் பாகிஸ்தானின் தந்தை என பதிவிட்டு இருந்தார். ஏற்கனவே கோட்சே குறித்த பா.ஜ.க. நிர்வாகிகளின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த கட்சிக்கு இது மேலும் நெருக்கடி ஏற்படுத்தியது.

இதையடுத்து அனில் சவுமித்ரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் நேற்று உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்துக்குள் தன்னுடைய பதிவுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு கெடு விதிக்கப்பட்டது.

Next Story