மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசு; அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு


மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசு; அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
x
தினத்தந்தி 18 May 2019 1:27 PM GMT (Updated: 18 May 2019 1:27 PM GMT)

மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசை அமைப்பதில் தீவிரம் காட்டும் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக 50 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பிராந்திய கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்தித்தது. இருப்பினும் அமைதி காத்த காங்கிரஸ், பா.ஜனதாவை மட்டுமே எதிராளியாக பார்த்து பிரசாரம் மேற்கொண்டது. 

இப்போது தேர்தல் முடியும் நிலையில் ஆந்திர பிரதேச மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியா முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.  புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூன்ஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். 

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு சென்ற போது அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசினார். அப்போது என்ன பேசினார்கள் என்பது தொடர்பாக தகவல் வெளியாகவில்லை. 

Next Story