அணைகள் வறண்டன: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு வறட்சி ஆலோசனை


அணைகள் வறண்டன: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு வறட்சி ஆலோசனை
x
தினத்தந்தி 19 May 2019 2:20 AM IST (Updated: 19 May 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

அணைகள் வறண்டு காணப்படுவது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு, வறட்சி ஆலோசனை வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய நீர் ஆணையம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்பட தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கு வறட்சி ஆலோசனை வழங்கி உள்ளது. ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கே.ஹல்தார் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள 31 பெரிய அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 51.59 பில்லியன் கனமீட்டர். ஆனால் இப்போது நீர் இருப்பு 6.86 பில்லியன் கனமீட்டர் மட்டுமே. இது 13 சதவீதம் ஆகும். எனவே இந்த மாநிலங்கள் இருக்கும் தண்ணீரை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும். இந்த அணைகள் மீண்டும் நிரம்பும் வரை தண்ணீரை குடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story