தேசிய செய்திகள்

டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது + "||" + No 5star luxury for new MPs

டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது

டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது
டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் வசதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை  நாளை நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றிப்பெறும் புதிய எம்.பி.க்கள் டெல்லிக்கு வரத் தொடங்குவார்கள். வழக்கமாக அவர்கள் ஓட்டல்களில் தங்க வைப்படுவார்கள். இதனால் அரசுக்கு செலவு ஏற்படுத்துவதாக விமர்சனம் இருந்தது. இந்நிலையில் இம்முறை டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் வசதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மக்களவை செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், புதிய எம்.பி.க்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் வெஸ்டர்ன் கோர்ட் கட்டிடம், புதிதாக கட்டப்பட்ட அதன் இணைப்பு கட்டிடம், பல்வேறு மாநில பவன்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மக்களவை சபாநாயகராக இருப்பவர் சுமித்ரா மகாஜன். இப்போது அவர் போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் போதே இவ்விவகாரத்தில் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். 

புதிய எம்.பி.க்களை சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கக்கூடாது, அவர்களை அரசு கட்டிடங்களில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்களவை செயலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி
உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, இந்திய பொருளாதார நிலை குறித்து பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
2. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
3. இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது: மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறியுள்ளார்.
4. புதிய இந்தியாவில் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, திறமை மட்டுமே முக்கியம் : பிரதமர் மோடி
கொச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 'புதிய இந்தியா' பற்றி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
5. தொழிலதிபர் ரதுல் புரி ரூ. 1400 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார்; புதிய தகவல்
மத்திய பிரதேச முதல் மந்திரியின் மருமகனான தொழிலதிபர் ரதுல் புரி ரூ. 1400 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார் என அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.