தேசிய செய்திகள்

ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை + "||" + Northern State abandoned Rahul Gandhi The southern state of hand

ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை

ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை
அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்த ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவனந்தபுரம்

வட இந்திய மக்கள் இந்தியாவின் பழம் பெரும் கட்சியான காங்கிரஸையும், அதன் தற்போதைய தலைமையையும் புறக்கணித்து விட்டதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்னடைவை சந்தித்து உள்ளார். இதனை எளிதாக எடுக்க முடியாது. ஏனெனில், கூட்டணியில் இல்லை என கூறிக்கொண்டாலும், அமேதி தொகுதியில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் காங்கிரசுக்கு உதவின. ஆனால், பாஜகவோ தனித்தே இம்மூன்று கட்சி கூட்டணியை எதிர்கொண்டு அமேதியில் அபார முன்னிலை பெற்றுள்ளது. ராகுல் காந்தி தலைமையையும்,  காங்கிரசையும் வட இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் ஏற்கவில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆனால் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ராகுல்காந்தி 2,34,915 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுனீர் 88,021 வாக்குகளும் பெற்று உள்ளார்.  ராகுல்காந்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில்  உள்ளார்.