கேரளாவில் 19 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை, திருவனந்தபுரத்தில் சசிதரூர் முன்னிலை
கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான இடது ஐக்கிய முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இடது ஜனநாயக முன்னணியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரி முன்னணி 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
திருவனந்தபுரம் தொகுதியில் முதலில் பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் முன்னிலை பெற்றார், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவைச் சந்தித்தார். ஆனால், நேரம் செல்லச்செல்ல காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் முன்னிலைபெற்று சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
தற்போது, வெளியான சுற்றுகளின் முடிவு நிலவரங்களின் படி, சசிதரூர் 1,39,801 வாக்குகள் பெற்றுள்ளார். 2-வது இடத்தில் பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரன் 1,25,986 வாக்குகள் பெற்று உள்ளார். வயநாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 1.50 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story