இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜனதாவிற்கு மீண்டும் வெற்றி முகம்
இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜனதாவிற்கு மீண்டும் வெற்றி முகம் காணப்படுகிறது.
2018 இறுதியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜனதா தோல்வியை தழுவியது. பா.ஜனதாவிடம் இருந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களை காங்கிரஸ் தன்வசப்படுத்தியது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா தம்ஸ் அப்! காட்டி முன்னிலையை பெற்றுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பா.ஜனதா 28 தொகுதிகளில் முன்னிலையை பெற்றுள்ளது. பீகாரில் பா.ஜனதா கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. சத்தீஷ்காரில் பா.ஜனதா 10 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா 60 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. இம்மாநிலங்களில் உள்ள 185 தொகுதிகளில் கடந்த வருடம் பா.ஜனதா 165 தொகுதிகளை வென்றது. இப்போதும் அதே அளவு வெற்றியை நோக்கி செல்கிறது.
உ.பி.யில் சமாஜ்வாடி -பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்ததால் பா.ஜனதா 161 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Related Tags :
Next Story