டெல்லி கிழக்கு தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெற்றி


டெல்லி கிழக்கு தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 4:26 AM IST (Updated: 24 May 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார்.

புதுடெல்லி, 

டெல்லி கிழக்கு தொகுதியில் தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே கவுதம் கம்பீர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

12,57,821 வாக்குள் எண்ணப்பட்ட நிலையில் 6,96,156 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார்.

இறுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அர்விந்தர் சிங் லவ்லி மற்றும் ஆம்ஆத்மி வேட்பாளர் ஆட்டிசி மர்லேனா ஆகியோரை விட அதிகவாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றார்.


Next Story