மத்திய அரசில் புதிய துறை ‘ஜல சக்தி’ மந்திரி பொறுப்பை கஜேந்திரசிங் செகாவத் ஏற்றார்


மத்திய அரசில் புதிய துறை ‘ஜல சக்தி’ மந்திரி பொறுப்பை கஜேந்திரசிங் செகாவத் ஏற்றார்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் புதிய துறையான ஜல சக்தியின் மந்திரி பொறுப்பை கஜேந்திரசிங் செகாவத் ஏற்றார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணியின் 2-வது அரசு நேற்று முன்தினம் பதவி ஏற்றது. இந்த அரசில், ‘ஜல சக்தி’ என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையானது நீர்வளம், குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு துறைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையில் இந்த துறையை பிரதமர் மோடி உருவாக்கி இருக்கிறார்.

கேபினட் மந்திரியாக பதவி ஏற்றுள்ள ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திர சிங் செகாவத் இந்த துறையின் முதல் மந்திரி ஆக்கப்பட்டுள்ளார். நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில், “தண்ணீர் தொடர்பான பணிகள் அனைத்தும் ஒரே அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்” என்றார்.

சர்வதேச மற்றும் மாநிலங்கள் இடையேயான தண்ணீர் பிரச்சினை, கங்கை நதியை தூய்மைப்படுத்துதல், சுத்தமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இந்த அமைச்சகம் கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story