கோவாவில் மேயர் மீது மானபங்க வழக்கு பதிவு


கோவாவில் மேயர் மீது மானபங்க வழக்கு பதிவு
x
தினத்தந்தி 2 Jun 2019 1:15 AM IST (Updated: 2 Jun 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

கோவாவில் மேயர் மீது மானபங்க வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பனாஜி,

கோவா மாநிலம் பனாஜி மாநகராட்சி மண்டோவி ஆற்றில் கரையோரம் நங்கூரமிட்டு இருக்கும் ஆக்கிரமிப்பு சூதாட்ட விடுதிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. ஒரு விடுதி நடைபாதையில் கட்டியிருந்த படிகட்டுகள் இடிக்கப்பட்டன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பனாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அடானாசியோ மான்செரட்டே, மேயர் உதய் மட்காய்கர், முன்னாள் மேயர் யதின் பரேக் ஆகியோர் அந்த பணிகளை பார்வையிட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்புகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பெண், காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 3 பேரும் தன்னை தகாத இடத்தில் தொட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் எம்.எல்.ஏ., மேயர் உள்பட 3 பேர் மீதும் மானபங்கம் உள்பட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story