கர்நாடக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம் - எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் புதிய உத்தரவு


கர்நாடக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம் - எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் புதிய உத்தரவு
x
தினத்தந்தி 2 Jun 2019 3:25 AM IST (Updated: 2 Jun 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம் என எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 28 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. தேர்தல் முடிந்ததும் மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.

டெல்லியில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு சென்றிருந்த எடியூரப்பா, அமித்ஷா உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும், கூட்டணி அரசு தானாக கவிழ்ந்தால் ஆட்சி அமைக்க முன்வரும்படி எடியூரப்பாவிடம் அமித்ஷா கூறியுள்ளார். மாநில தலைவர் பதவியில் இன்னும் 3 மாதங்கள் நீடிக்கும்படி எடியூரப்பாவுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story