ஊழல் செய்த அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது


ஊழல் செய்த அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2019 7:21 AM IST (Updated: 2 Jun 2019 7:21 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் ஊழல் செய்த அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.  இதன்பின் பதவியேற்று கொண்ட முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, ஊழலை வேருடன் ஒழிப்பேன் என உரையாற்றினார்.

இந்த நிலையில், அரசு பணியில் உள்ள ஊழியர்களில் ஊழல் செய்வோரை பற்றிய தகவலை சிலர் சேகரித்துள்ளனர்.  பின்னர் இந்த தகவல்களை வைத்து கொண்டு அரசு ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.  இந்த தகவல்களை வெளியே விடவேண்டாம் என்றால் பணம் தரவேண்டும் என்று கேட்டு அவர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  இதனை அடுத்து அரசு ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story