ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி


ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 3 Jun 2019 12:33 PM IST (Updated: 3 Jun 2019 12:33 PM IST)
t-max-icont-min-icon

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம்,  ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில்,  மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில்,  ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில்,  6 வாரங்கள் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

Next Story