கடைநிலை மனிதர்களுக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டப்பலன் கிடைக்க செய்வோம் - மத்திய மந்திரி உறுதி


கடைநிலை மனிதர்களுக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டப்பலன் கிடைக்க செய்வோம் - மத்திய மந்திரி உறுதி
x
தினத்தந்தி 5 Jun 2019 3:15 AM IST (Updated: 5 Jun 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

கடைநிலை மனிதர்களுக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டப்பலன் கிடைக்க செய்வோம் என மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரியாக அஸ்வினி குமார் சவுபே நேற்று பொறுப்பேற்றார். அதற்காக அவர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து, சுகாதார அமைச்சக அலுவலகத்தை அடைந்தார். அங்கு 5 மரக்கன்றுகள் நட்டு வைத்த பிறகு இலாகா பொறுப்புகளை ஏற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் பலன்கள், கடைநிலை மனிதர்களுக்கும் கிடைக்க பாடுபடுவோம். நல்ல உடல்நலத்துடன் திகழ, அனைவரும் தினந்தோறும் அரை மணி நேரம் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதலில் ஈடுபட வேண்டும்” என்றார்.

Next Story