பிரதமர் மோடிக்கு முஸ்லிம் பிரமுகர்கள் பாராட்டு கடிதம்


பிரதமர் மோடிக்கு முஸ்லிம் பிரமுகர்கள் பாராட்டு கடிதம்
x
தினத்தந்தி 5 Jun 2019 3:45 AM IST (Updated: 5 Jun 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு முஸ்லிம் பிரமுகர்கள் பாராட்டு கடிதம் எழுதி உள்ளனர்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் சமீபத்தில் பேசினார். அப்போது, “ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்களால், சிறுபான்மையினர் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். அந்த அச்சத்தை போக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்“ என்று அவர் கூறினார்.

இந்த பேச்சுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முஸ்லிம் சமுதாய பிரமுகர்கள் பலர் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில், “சிறுபான்மையினரின் அச்சத்தை போக்க வேண்டும் என்று தாங்கள் பேசியது பாராட்டுக்குரியது. சிறுபான்மையினர் நலனுக்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்போம். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய 3 அம்சங்களில் தாங்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டும்“ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் கமால் பரூக்கி, கல்வியாளர் இனாம்தார், மத்திய ஹஜ் கமிட்டி முன்னாள் தலைவர் கைசர் ஷமிம் உள்ளிட்டோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Next Story