வருகிற 2021ம் ஆண்டுக்குள் மம்தாவின் அரசு கவிழும்; பா.ஜ.க.
வருகிற 2021ம் ஆண்டுக்குள் மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான அரசு கவிழும் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால், கடந்த தேர்தலில் 2 இடங்களை பெற்றிருந்த பா.ஜ.க. இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளித்தது.
இதனை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். தொடர்ந்து 6 எம்.எல்.ஏ.க்கள் இணைய உள்ளனர் என அக்கட்சி கூறியிருந்தது. இதனால், குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்தது.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 2021ம் ஆண்டு வரை மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி நீடிப்பார் என நான் நினைக்கவில்லை. இதுபற்றி இப்பொழுதே கூறுவது என்பது சரியாக இருக்காது. 2021 தேர்தலுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். ஆனால் இந்த அரசு தன்னாலேயே கவிழும் என்று கூறினார்.
Related Tags :
Next Story