எட்டு அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்த மத்திய அரசு
எட்டு அமைச்சரவை குழுக்களை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற மோடி தலைமையிலான அரசில் 8 அமைச்சரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
இதன்படி நியமனங்களுக்கான அமைச்சரவை குழு, வீட்டு வசதி அமைச்சரவை குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சரவை குழு ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மந்திரி நிர்மலா சீதாராமன், வெளிவிவகார துறை மந்திரி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story