திருப்பதி அருகே சாலை விபத்து; ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
திருப்பதி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி,
ஆந்திர பிரதேசத்தில் திருப்பதி அருகே குருவராயபள்ளியில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வழியில் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதன்மீது கார் திடீரென மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதேபோன்று இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story