மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
ஜூன் 15-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என பிரதமர் மோடிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். மாநில திட்டங்களுக்கு உதவி செய்யும் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த பயனும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த முடிவை விமர்சனம் செய்துள்ள மாநில பா.ஜனதா தலைவர் ஜெய் பிரகாஷ், மோடியின் தலைமையில் ஒட்டுமொத்த தேசமே முன்நோக்கி செல்லும் நிலையில், மம்தா மட்டும் எதிர்க்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் கூட நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் மம்தா மட்டும் எதிராக உள்ளார். மம்தாவின் முடிவு தேசத்தின் நலனுக்கு எதிரானது. அவர் இந்தியாவிற்கு எதிரானவர் போன்று செயல்படுகிறார். வங்காளத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே பா.ஜனதாவிற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாதம் அல்லது வளர்ச்சி தொடர்பாக மதவாத கட்சியான பா.ஜனதாவிடம் இருந்து எங்களுக்கு எந்தஒரு பாடமும் தேவையில்லை எனக் கூறியுள்ளது.
Related Tags :
Next Story