2019 தேர்தலில் பா.ஜனதா மட்டும் ரூ.28,000 கோடி செலவிட்டுள்ளது காங்கிரஸ் குற்றச்சாட்டு


2019 தேர்தலில் பா.ஜனதா மட்டும் ரூ.28,000 கோடி செலவிட்டுள்ளது காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jun 2019 8:01 PM IST (Updated: 7 Jun 2019 8:01 PM IST)
t-max-icont-min-icon

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மட்டும் ரூ.28,000 கோடி செலவிட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கட்சி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் அமோக வெற்றியை பதிவு செய்து மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் பா.ஜனதா மட்டுமே அதிகமான தொகையை செலவிட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மட்டும் ரூ.28,000 கோடி செலவிட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊடக ஆய்வுகள் மையத்தின் தரவுகளின்படி பா.ஜனதா மட்டுமே நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரூ.28,000 கோடியை செலவு செய்துள்ளது. மொத்த கட்சிகள் செய்த செலவானரூ.60,000 கோடியில் 45% ஆகும். பா.ஜனதாவின் செலவுத்தொகை நாட்டின் கல்வி பட்ஜெட்டின் 3-ல் ஒரு பங்காகும். இதுவே சுகாதாரப் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டால் 43% ஆகும்.  பாதுகாப்பு பட்ஜெட்டில் 10% ஆகும் என திட்ட செலவுகளுடன் பா.ஜனதா தேர்தல் செலவை ஒப்பிட்டார்.  

ஜனநாயகம் சுதந்திரமான, நியாமான தேர்தலை நம்பியுள்ளது. இது சாத்தியமாக வேண்டும் என்றால் அனைவருக்கும் சரிசம வாய்ப்பு சாத்தியமாக வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். 2019 தேர்தல் செலவுத்தொகையில் பெரும்பங்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததா? எனக் கேள்வியை எழுப்பியுள்ளார்.


Next Story