நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி - சிவசேனா வலியுறுத்தல்


நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி - சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2019 3:30 AM IST (Updated: 8 Jun 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற 2-வது பெரிய கட்சி சிவசேனா ஆகும். ஆனால் மத்திய மந்திரி சபையில் சிவசேனாவுக்கு ஒரு இடம் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் சிவசேனா அதிருப்தியில் உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். கடந்த முறை நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக திகழ்ந்த அ.தி.மு.க.வுக்கு துணை சபாநாயகர் பதவியை பா.ஜனதா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story