மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஆஜர்: கோர்ட்டில் 2 மணி நேரம் நின்ற பிரக்யாசிங் எம்.பி.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஆஜரான பிரக்யாசிங் எம்.பி., கோர்ட்டில் 2 மணி நேரம் நின்றபடியே இருந்தார்.
மும்பை,
கடந்த 2008-ம் ஆண்டில், மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் பெண் சாமியாரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரக்யாசிங் தாக்குர் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள தனிக்கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி கூறியும், கடந்த திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரக்யாசிங் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து, நேற்று ஆஜரானார். 2 உதவியாளர்கள் உதவியுடன் அவர் நடந்து வந்தார். “வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?” என்று நீதிபதி பாடல்கர் கேட்டதற்கு, “எனக்கு தெரியாது” என்று பிரக்யாசிங் பதில் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமரும் பெஞ்சில் நீதிபதி அமர சொன்னபோது, அங்கு தூசியாக இருந்ததால், பிரக்யா சிங்கின் உதவியாளர்கள் துணி விரித்து அவரை அமர வைத்தனர். பின்னர், சாட்சி கூண்டில் அமர நாற்காலி வேண்டுமா? என்று நீதிபதி கேட்டபோது, தான் கூண்டுக்கு அருகே நிற்பதாக பிரக்யா சிங் கூறினார். அவர் 2½ மணி நேரம் நின்றபடியே இருந்தார்.

Related Tags :
Next Story