தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி பலி + "||" + Jammu & Kashmir: An exchange of fire is underway between terrorists and security forces in Verinag of Anantnag district

காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி பலி

காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
ஜம்மு,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் வெரினாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  ராணுவ வாகனங்களில் வந்திறங்கிய அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அவர்களுக்கு ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.  இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.  தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா நகரில் லஸ்சிபோரா பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  தொடர்ந்து நடந்த சண்டையில் மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டார்.  அவர்களிடம் இருந்து 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் பயங்கரம்: துப்பாக்கி சண்டையில் 14 பேர் சாவு
மெக்சிகோவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 14 பேர் பலியாகினர்.
2. காஷ்மீர் என்கவுண்ட்டர்; கொல்லப்பட்டவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி
காஷ்மீர் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி என அறியப்பட்டு உள்ளது.
3. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
4. பாலக்காடு அருகே மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
பாலக்காடு அருகே பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.
5. சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.