சத்தீஷ்காரில் பஸ்சை வழிமறித்து தீ வைத்த நக்சலைட்டுகள்


சத்தீஷ்காரில் பஸ்சை வழிமறித்து தீ வைத்த நக்சலைட்டுகள்
x
தினத்தந்தி 9 Jun 2019 2:15 AM IST (Updated: 9 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் பஸ்சை வழிமறித்த நக்சலைட்டுகள் அதற்கு தீ வைத்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூரில் இருந்து பெட்ரே பகுதிக்கு நேற்றுமுன்தினம் மாலையில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை நக்சலைட்டுகள் வழிமறித்தனர்.

பின்னர் அதில் இருந்த பயணிகளை இறங்க சொல்லிவிட்டு, பஸ்சுக்கு தீ வைத்தனர். இதில் பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

Next Story