நடிகை ரோஜாவுக்கு இடம் இல்லை: ஆந்திராவில் 25 புதிய மந்திரிகள் பதவியேற்பு - முதல்-மந்திரி அலுவலகம் வந்தார், ஜெகன்மோகன் ரெட்டி


நடிகை ரோஜாவுக்கு இடம் இல்லை: ஆந்திராவில் 25 புதிய மந்திரிகள் பதவியேற்பு - முதல்-மந்திரி அலுவலகம் வந்தார், ஜெகன்மோகன் ரெட்டி
x
தினத்தந்தி 9 Jun 2019 3:04 AM IST (Updated: 9 Jun 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முதல்-மந்திரி அலுவலகம் வந்தார். ஆந்திராவில் 25 புதிய மந்திரிகள் பதவியேற்றுக் கொண்டனர். அதில் நடிகை ரோஜாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

அமராவதி,

ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த மாதம் 30-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார். அன்றைய தினம் வேறு மந்திரிகள் பதவியேற்காத நிலையில், நேற்று 25 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

மாநிலத்தில் சமூக சமத்துவ மந்திரிசபை அமைக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப தனது மந்திரி சபையில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்து உள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவருக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்கவில்லை. இது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு நேற்று காலையில் முதல் முறையாக வந்தார். புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓத தனது அறைக்குள் நுழைந்த அவர், முதல் முறையாக 3 கோப்புகளில் கையெழுத்து போட்டார்.

அதன்படி சமூக நலப்பணியாளர்களின் சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்துவது, அமராவதி எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமானப்பணிகள் மற்றும் பத்திரிகையாளர் மருத்துவ காப்பீடு திட்டங்களில் அவர் கையெழுத்து போட்டார்.

Next Story