காஷ்மீர் முகாமில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ராணுவ வீரர் சாவு


காஷ்மீர் முகாமில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ராணுவ வீரர் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2019 2:08 AM IST (Updated: 10 Jun 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் முகாமில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் கந்தர்பல் மாவட்டத்துக்கு உட்பட்ட மனஸ்பல் ராணுவ முகாமில் தரண் குமார் என்ற வீரர் பணியில் இருந்தார். இவர் நேற்று முன்தினம் தனது துப்பாக்கியை துடைத்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தது.

இதில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த தரண் குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சக வீரர்கள் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மனஸ்பல் முகாமில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story