நிதி அமைச்சகத்துக்கு பதிலாக அமலாக்கத்துறையை உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் - பா.ஜனதா எம்.பி. கோரிக்கை


நிதி அமைச்சகத்துக்கு பதிலாக அமலாக்கத்துறையை உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் - பா.ஜனதா எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2019 2:38 AM IST (Updated: 10 Jun 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

நிதி அமைச்சகத்துக்கு பதிலாக அமலாக்கத்துறையை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என பா.ஜனதா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

அமலாக்கத்துறை, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில், அதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. நிஷிகந்த் துபே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் ஆகியவை தொடர்பான விவகாரங்களைத்தான் அமலாக்கத்துறை பெரும்பாலும் விசாரிக்கிறது. அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தில் பதிவு செய்யப்படும் குற்றங்கள் அனைத்தும் இந்திய தண்டனை சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் வரக்கூடிய குற்றங்கள் ஆகும்.

அந்த சட்டங்கள் எல்லாம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருபவை என்பதால், அமலாக்கத்துறையை உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story