இந்தியா தாக்குதல் நடத்தும் என அச்சம், பயங்கரவாத முகாம்களை மூடியது பாகிஸ்தான்
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடியது.
பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழிக்கும் பணியை இந்திய ராணுவம் முன்னெடுத்து வருகிறது. புல்வாமா தாக்குதலின் போது விமானப்படையும் அதிரடியை மேற்கொண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் எல்லை பகுதியில் எந்த ஊடுருவலும் நிகழவில்லை.
கடந்த 2 மாதங்களாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதில் இது தெரியவந்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றிய தகவல் மற்றும் பதிவுகளை இந்திய அரசு சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்தது. எல்லையில் 15-க்கும் அதிகமான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன. இதனையடுத்து இந்திய ராணுவமும் மீண்டும் வான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாகவும் பயங்கரவாத முகாம்களை மூட பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுத்துள்ளது.
அப்பகுதியில் இருந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கங்களின் முகாம்கள் மூடப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பத்திரிக்கை செய்தியும் வெளியாகியுள்ளது.
சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்ஏடிஎப்) விரைவில் கூட உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தற்காலிக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story