டெல்லியில் வாட்டி வதைக்கும் வெயில் - 118 டிகிரி பதிவானது


டெல்லியில் வாட்டி வதைக்கும் வெயில் - 118 டிகிரி பதிவானது
x
தினத்தந்தி 11 Jun 2019 12:39 AM IST (Updated: 11 Jun 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வாட்டி வதைக்கும் வெயிலின் அளவு, அதிகபட்சமாக அங்கு 118 டிகிரி பதிவானது.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வடக்கு மாநிலங்களில் வெப்ப நிலை குறையவில்லை.

இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று அங்கு அதிகபட்சமாக 118.4 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

இதனால் ஏராளமானோர் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரியில் உடல்சூடு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்றனர்.

Next Story