தேசிய செய்திகள்

துபாயில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது - அதிர்ஷ்டவசமாக 195 பேர் உயிர் தப்பினர் + "||" + Tire burst into a private plane with an emergency landing; 195 People survived a miracle

துபாயில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது - அதிர்ஷ்டவசமாக 195 பேர் உயிர் தப்பினர்

துபாயில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது - அதிர்ஷ்டவசமாக 195 பேர் உயிர் தப்பினர்
துபாயில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது. இதில் இருந்த 195 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஜெய்ப்பூர்,

துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி இந்திய விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.

திடீரென நடுவானில் விமானத்தின் ஒரு டயர் வெடித்தது. இதனால் விமானம் லேசாக குலுங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.


இந்நிலையில் அந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. டயர் வெடித்திருந்த நிலையிலும் விமானத்தை சாமர்த்தியமாக விமானி தரையிறக்கியதால் 195 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இறக்கி அழைத்துச் சென்றனர். அதிக எடையை சுமந்து கொண்டு விமானம் புறப்பட்டதால் அழுத்தம் காரணமாக விமானத்தின் டயர் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து பயணிகள் கூறுகையில், “விமானத்தின் டயர் வெடித்தது குறித்து விமானம் தரையிறங்குவது வரை எங்களுக்கு தெரியாது. விமான நிலையத்தில் இறங்கிய போது தான் ஏதோ விபரீதம் நடக்க இருந்தது தெரியவந்தது” என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: திற்பரப்பு அருவியில் குளிக்க திரண்ட சுற்றுலா பயணிகள்
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
2. ஏற்காடு ஏரியில் விசைப்படகு சவாரி நிறுத்தம்
ஏற்காடு ஏரியில் விசைப் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
3. குற்றாலத்தில் சீசன் தொடங்குவது தாமதம் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம்
மழை இல்லாததால் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
4. கோடைவிடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
கோடைவிடுமுறையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்ய அவர்கள் ஆர்வம் காட்டினர்.
5. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை
கேரளாவில் நடுவழியில் பேருந்து நின்ற நிலையில் மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை விழுந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...