காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, 5 பேர் காயம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் படை வீரர்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக்கில் கேபி சவுக் பகுதியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்துள்ளனர். இருதரப்பு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது. இதில் பாதுகாப்பு படை தரப்பில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான். அங்கு இருதரப்பு இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. அப்பகுதியை நோக்கி கூடுதல் படையினர் விரைந்துள்ளனர்.
Related Tags :
Next Story