தேசிய செய்திகள்

அவசர சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படும் முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் + "||" + Union Cabinet approves triple talaq bill

அவசர சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படும் முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

அவசர சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படும் முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
அவசர சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படும் முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி, .

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 17-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகின்றன.


மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்பட்ட மசோதாக்களில் முத்தலாக் தடை மசோதா முக்கியமானதாகும். முத்தலாக் முறை மூலம் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதை தடை செய்யும் வகையில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 2 முறை அவசர சட்டம் கொண்டு வரப்பட்டன.

பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த 2 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மாநிலங்களவையில் கிடப்பில் உள்ளன. தற்போது புதிய அரசு அமைந்திருக்கும் நிலையில் புதிதாக மசோதா தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டி உள்ளது. அதன்படி இந்த முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

அடுத்ததாக காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும், காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதைப்போல கல்வித்துறை சீர்திருத்தத்துக்கு வகை செய்யும் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் நிலை இடஒதுக்கீடு) மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதைத்தவிர காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்.

மேலும் அரசு இல்லங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் அங்கீகாரம் இன்றி தங்கி இருப்போரை வெளியேற்ற வகை செய்யும் பொது வளாகங்கள் திருத்த மசோதாவுக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இவற்றை தவிர ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா, ஓமியோபதி மத்திய கவுன்சில் (திருத்தம்) மசோதா, பல் மருத்துவர்கள் மசோதா ஆகியவற்றுக்கும் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. மேலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்குழுவின் பதவிக்காலத்தை 2 மாதம் நீட்டிப்பதற்கும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த தகவல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.


ஆசிரியரின் தேர்வுகள்...