நாடாளுமன்றத்தில் ஜூன் 16ந்தேதி காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது
நாடாளுமன்றத்தில் ஜூன் 16ந்தேதி காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை 2வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 17ந்தேதி தொடங்குகிறது.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 38க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான பிரச்சினைகளுக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இதுபற்றி நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரலாத் ஜோஷி இன்று கூறும்பொழுது, நாடாளுமன்றத்தில் வருகிற ஜூன் 16ந்தேதி காலை நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டமும் நடைபெறும்.
இதேபோன்று பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி நிர்வாக குழு கூட்டமும் அன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறும் என கூறினார்.
Related Tags :
Next Story