மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் -பிரியங்கா
மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
ரேபரேலி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே சமயம் பிரியங்காவின் சகோதரரும், கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். சோனியாவிற்கு ஓட்டளித்த ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தாய் சோனியாவுடன் மகள் பிரியங்கா காந்தியும் சென்றார்.
தொண்டர்களிடையே பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:-
கட்சியினர் வெற்றியை போதிய அளவு உறுதி செய்யவில்லை. தேர்தலில் கட்சிக்காக எவரெல்லாம் உழைக்கவில்லை என்பதை நான் கண்டறிவேன். நான் எதை பற்றியும் பேச விரும்பவில்லை. ஆனால் உண்மையை பேச வேண்டும் என்று தான் நினைக்கிறேன். மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன். சோனியா மற்றும் ரேபரேலி மக்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மத அடிப்படையில் யார் வேலை செய்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.
Related Tags :
Next Story