இந்தியாவுக்கென பிரத்யேகமாக விண்வெளி நிலையம் அமைக்க திட்டம்: இஸ்ரோ தலைவர்


இந்தியாவுக்கென பிரத்யேகமாக விண்வெளி நிலையம் அமைக்க திட்டம்: இஸ்ரோ தலைவர்
x
தினத்தந்தி 13 Jun 2019 4:33 PM IST (Updated: 13 Jun 2019 4:33 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கென பிரத்யேகமாக விண்வெளி நிலையம் அமைக்க திட்டம் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா தனக்கென பிரத்யேகமாக சொந்த விண்வெளி மையத்தை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். ககன்யான் திட்டத்தின் விரிவாக்கமாக இந்த திட்டம் இருக்கும் என்றார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:- “மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு பிறகு ககன்யான் திட்டத்தை நீட்டிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்தியா சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது” என்றார்.

Next Story